உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

கல்லூரிகளுக்கான ’நாக்’ தர வரிசையில் மாற்றம்!

கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் தேர்ச்சி, உட்கட்டமைப்பு, ஆசிரியர் கல்வித்தகுதிகள் ஆராய்ச்சி அடிப்படையில், தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. 

மத்திய அரசின் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலான, நாக் அமைப்பு மூலம், நான்கு வகையாக தரவரிசை வழங்கப்பட்டது. மிகச் சிறந்த கல்லுாரிக்கு, ஏ சிறந்த கல்லுாரிக்கு, பி - திருப்தியான கல்லுாரிக்கு, சி மற்றும் அதிருப்தி என்பதற்கு, டி என, தரவரிசை தரப்பட்டது. இந்த ஆண்டு முதல், இந்த தரவரிசை ஏழு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஏ பிளஸ் பிளஸ், ஏ பிளஸ், ஏ, பி பிளஸ் பிளஸ், பி, சி மற்றும் டி என, மாற்றப்பட்டுள்ளது. டி தரம் பெறும் கல்லுாரிகள், அதிருப்தி பட்டியலில் சேர்க்கப்படுகிறது. தற்போது, நாக் அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்ட தரவரிசை அப்படியே தொடரும். புதிதாகவும், புதுப்பிக்கவும் வரும் கல்லுாரிகளுக்கு, புதிய முறையில், கிரேடு தரப்படும் என, நாக் கமிட்டி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறும்போது, நான்கு தர வரிசையில், மிக சிறந்த செயல்பாடு கொண்ட உயர்தர கல்வி நிறுவனங்களை தனியாக பிரிக்க முடியவில்லை. இந்த ஏழு வகை தர வரிசையால், கல்வி நிறுவனங்களின் அந்தஸ்து, ஓரளவுக்கு சரியாக பிரிக்கப்படும் என்றனர்.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்