உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

பல்கலை துணைவேந்தர் பதவி; 23ல் தேடல் குழு ஆலோசனை!

சென்னை பல்கலையின் துணைவேந்தர் பணியிடம், பிப்ரவரி முதல் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டாலும், சட்டசபை தேர்தலால் பணிகள் முடங்கின. 

பின், புதிய அரசு அமைந்ததும், துணைவேந்தர் பதவிக்கு போட்டி அதிகரித்தது. யாருக்கு பதவி அளிப்பது என்ற பிரச்னையால் மீண்டும் கிடப்பில் போனது.

அதே நேரத்தில், துணைவேந்தரின்றி பட்டமளிப்பு விழா நடத்த, உயர் கல்வித்துறை மற்றும் சென்னை பல்கலை அதிகாரிகள், இரண்டு முறை முயற்சித்தனர். கவர்னரின் பங்கேற்பு தேதி கிடைத்தது. ஆனால், பல தரப்பிலும் எதிர்ப்பு வந்ததால் பட்டமளிப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. பதவி கேட்டோர், விண்ணப்பித்தோர், தகுதி பெற்றோர், சிபாரிசு பெற்றோர் என, பல வகையிலும், பதவிக்கு போட்டி போடுவோரின் பெயர்கள் பரிசீலிக்கப் படுகின்றன. கவர்னருக்கு அனுப்ப உள்ள இறுதி பட்டியலில், மூன்று பேர் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும். 

இது குறித்து, வரும், 23ல் தேடல் குழுவின் ஆலோசனை நடக்கிறது. இதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, துணைவேந்தர் யார் என இறுதி செய்யப்படும் என, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்