உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

ஒலிம்பிக் பயிற்சி போட்டி கோவை மாணவர் தேர்வு

கோவை: குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கு பயிற்சி போட்டியில் பங்கேற்க, கோவை பள்ளி மாணவர் பிரணவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன், 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதில், பல்வேறு பிரிவுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. பனிச்சறுக்கு போட்டியில், பங்கேற்பதற்கான தகுதிப் போட்டியை, இந்திய பனிச்சறுக்கு விளையாட்டு சங்கம் டில்லியில் நடத்தியது.


இதில், 10 வயது முதல், 13 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான தகுதிப் போட்டி நடந்தது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களில் கோவையை சேர்ந்த யுவபாரதி பள்ளி மாணவர் பிரணவ்,11 மட்டும் தேர்வு செய்யப்பட்டார். மாணவர் பிரணவ்க்கு தேவையான உதவிகளை, பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது.


இது குறித்து பயிற்சியாளர்கள், மெரிக் ஸ்டிரின்ஞ், மன்ப்ரீத் மற்றும் ராகுல் ஆகியோர் கூறியதாவது:


2018ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில், அடுத்த குளிர்கால போட்டி எங்கு நடக்கும் என்பது அறிவிக்கப்படும். அப்போட்டியில் விளையாட முதல் கட்ட பயிற்சிக்கு மாணவர் பிரணவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பயிற்சி ஆட்டங்களில் தனது திறமையை வெளிப்படுத்தினால், 2022ல் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கலாம்.


இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறார். இந்தியாவில் உள்ள சிம்லா, குல்மார்க், டேராடூன், குர்கான் ஆகிய இடங்களில் உள்ள பனிச்சறுக்கு மைதானங்களிலும், இதே போல சர்வதேச தரத்திலான பனிச் சறுக்கு மைதானங்கள் கொண்ட ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் சிறப்பு பயிற்சி முகாமிலும், கலந்து கொண்டு பயிற்சி பெறுவார்.


பனிச்சறுக்கு விளையாட்டு போட்டிகள் குறுகிய ஓடுதளம், 110 மீ., மற்றும் நீண்ட ஓடுதளம், 400 மீ, என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். இதில், பிரணவ், 400 மீட்டர் ஓடுதளத்தில் நடக்கும், பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்கிறார். ரிலே போட்டிகளிலும் பங்கேற்கிறார். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்