உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

ஒன்றிய அளவிலான செஸ் போட்டி

வால்பாறை பள்ளிகளுக்கு இடையேயான ஒன்றிய அளவிலான ’செஸ்’ போட்டியில், 79 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.


வால்பாறை ஒன்றிய அளவில், 11 மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான ’செஸ்’ போட்டி நேற்று வால்பாறையில் நடந்தது. இதில், 86 பள்ளிகளை சேர்ந்த, 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


போட்டியை துவக்கி வைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர் சார்லஸ் இன்பராஜ், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் எட்வின்பெர்னாட்ஸ் ஆகியோர் பேசும் போது, ”வால்பாறை தாலுகாவில் உள்ள துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான செஸ் போட்டி முதலில் பள்ளி அளவில் நடைபெற்றது. 


தற்போது ஒன்றிய அளவில் இந்த போட்டி நடக்கிறது. இதில் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும். ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், இம்மாதம், 14ல் கோட்டூர் குறுமைய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்,” என்றார்.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்