உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

புதுச்சேரி பல்கலை பட்டமளிப்பு விழா ஜர ஏற்பாடுகள் ஜரூர்!

புதுச்சேரி பல்கலைக்கழகம் 25வது பட்டமளிப்பு விழாவை, வரும் 28ம் தேதி நடத்த முழு வீச்சில் ஆயத்தமாகி வருகிறது.


புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985 ஆண்டு 800 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பட்டமளிப்பு விழா நடத்தி, மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றி வந்த பல்கலைக்கழகம், நிர்வாக குளறுபடியில் சிக்கிய பிறகு பட்டமளிப்பு விழா நடத்தவில்லை.


கடந்தாண்டு, மூன்றாண்டுகளுக்கு சேர்த்து பட்டமளிப்பு விழா நடத்தி பிரயாச்சித்தம் தேடிக் கொண்டது. தற்போது, 2016ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழாவை, வரும் 28ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.


ஆன்-லைன்


பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் பெற விரும்பும் பட்டதாரிகளிடமிருந்து பெயர் பதிவினை ஆன்-லைனில் பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது. பாட வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள், சிறப்பு நிலையில் தங்க பதக்கம் வென்றவர், பி.எச்டி., முடித்த மாணவர்கள், www.pondiuni.edu.in/convocation/2017/ என்ற ஆன்-லைனில் வரும் 14ம் தேதி மாலை 5.00 மணிக்கு பதிவு செய்து கொண்டு பட்டங்களை பெறலாம்.


கட்டணம்


டிகிரி சான்றிதழ் பெற இதுவரை கட்டணம் செலுத்தாத பட்டதாரிகள், பல்கலை வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நிதி அதிகாரி, புதுச்சேரி பல்கலைகழகம் என்ற பெயருக்கு புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில், 500 ரூபாய் டி.டி., அல்லது செலான் செலுத்தி பெறலாம். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வரும்போது அவசியம் டி.டி., செலானை காண்பிக்க வேண்டும்.


வெள்ளி விழா


பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இது 25வது வெள்ளி விழா பட்டமளிப்பு என்பதால், பல்கலைக்கழகம் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, துணை ஜனாதிபதி உள்பட சிறப்பு விருந்தினர்களை அழைக்கும் பணி நடந்து வருகிறது.


கவுரவ பட்டம்


பல்துறையில் சிறந்த நிபுணர்களுக்கு பட்டமளிப்பு விழாவின்போது, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கூட புதுச்சேரி பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிட்டு காய் நகர்த்தியது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக்கொள்ளாததால் அந்த முடிவை கைவிட்டது. இந்தாண்டு கவுரவ டாக்டர் பட்டம் யாருக்கும் வழங்க முடிவு செய்யப்படவில்லை.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்