உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11


முதல் பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி

பன்முக திறன் போட்டி; மாணவ, மாணவியர் அசத்தல்

திருப்பூரில் நடந்த, பன்முக திறன் போட்டியில், மாணவ, மாணவியர், திறமையை வெளிப்படுத்தினர்.


மாவட்ட படைப்பாளிகள் சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழாவையொட்டி, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றோர் விவரம் வருமாறு:


கட்டுரைப்போட்டி:3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பிரிவில், பெரிச்சிபாளையம், மாநகராட்சி பள்ளி மாணவியர் தர்ஷினி முதலிடம், பிரியங்கா இரண்டாமிடம், வேலவன் மெட்ரிக் பள்ளி மாணவி பிரியதர்ஷினி மூன்றாமிடம்.


6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பிரிவில், நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி மாணவி ரிஷா ஷப்ரின் முதலிடம், பெரிச்சிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவி கவிப்ரியா இரண்டாமிடம், கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவி தேவி பிரியா மூன்றாமிடம் பெற்றனர்.


9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பிரிவில், அவிநாசி அரசு பள்ளி மாணவி சுமித்ரா முதலிடம், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மாணவி கனிமொழி இரண்டாமிடம், கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவன் அஸ்வின் பாலாஜி மூன்றாமிடம்.


ஓவியப்போட்டி:


3ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான பிரிவில், திருக்குமரன் பள்ளி மாணவன் நவீன் முதலிடம், வேலவன் மெட்ரிக் பள்ளி மாணவி சிந்துஜா இரண்டாமிடம், எஸ்.கே.வி., பள்ளி மாணவன் கிரிதர் மூன்றாமிடம்.

6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான பிரிவில், கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவன் ரோ ஹித் முதலிடம், வேலவன் மெட்ரிக் பள்ளி மாணவி ராணி பிளஸ்ஷி இரண்டாமிடம், ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி தீக்ஷா நந்தினி மூன்றாமிடம். 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பிரிவில், கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவன் புவனேஷ் முதலிடம், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மாணவியர் சங்கமித்ரா இரண்டாமிடம், காயத்ரி மூன்றாமிடம் பிடித்தனர்.


பேச்சு போட்டி:


3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பிரிவில், வித்யாசாகர் பள்ளி மாணவன் அஸ்வின் முதலிடம், பெரிச்சிபாளையம், மாநகராட்சி பள்ளி மாணவி தமிழ்செல்வி இரண்டாமிடம், எஸ்.கே.வி., பள்ளி மாணவி நேத்ரா மூன்றாமிடம் வென்றனர்.


6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான பிரிவில், கே.எஸ்.சி., அரசு பள்ளி மாணவன் சிவபாலன் முதலிடம், பெருமாநல்லூர் அரசு பள்ளி மாணவி ஸ்வாதி இரண்டாமிடம், பெரிச்சிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவி சவுமியா மூன்றாமிடம்.


9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பிரிவில், பெருமாநல்லூர் அரசு பள்ளி மாணவி கிருத்திகா முதலிடம், பிஷப் உபகாரசாமி பள்ளி மாணவன் பாலமுருகன் இரண்டாமிடம், கே.எஸ்.சி., அரசு பள்ளி மாணவன் ஆஷிக் மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விழாவில், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் வெற்றிக்கு வழிகாட்டி