உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

ஆசிரியர்களுக்கு வாழ்த்துமடல் அசத்திய சிவகங்கை சி.இ.ஓ.,

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வாழ்த்துமடல் அனுப்பி அசத்தியுள்ளார்.


டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த தினத்தையொட்டி இன்று (செப்., 5) ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெயரளவில் தான் ஆசிரியர் தினவிழா கொண்டாப்பட்டது. 


இந்தாண்டு ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், முதன் முறையாக மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மடலில் கூறியிருப்பதாவது: 


வல்லரசு இந்தியாவை வடிக்கின்ற சிற்பிகளாம் மாணவர் சமூகத்தை, மாட்சியுடன் உருவாக்க அர்ப்பணிப்பு உணர்வோடு, அயராது உழைக்கின்ற அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர் அனைவருக்கும், அன்புடனே அவர்கள் தமை அரவணைத்து வழிநடத்தும் தகைமைத் திறன்கொண்ட தலைமை ஆசிரியர்களுக்கும், கல்விப் பெருங்கடலின் கலங்கரை விளக்கென மாணவர்க்கு வழி காட்டும் மகத்தான பணிதொடர ஆசிரியர் தினநன்னாள் அன்பான வாழ்த்துக்களை உள்ளத்தில் உவகையுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன், இவ்வாறு கூறப்பட்டிருந்தது.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்