உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

அரசுப் பள்ளியை மேம்படுத்த வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: ’தினமலர்’ நாளிதழ் செய்தியை ஆதாரமாகக் கொண்டு, மதுரை மாவட்டம் அய்யங்கோட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்ய தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 


மதுரை ஆண்டாள்புரம் கார்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு: 


வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளி 2016-17 கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பத்தாம் வகுப்பில் 98.6 சதவீதம் தேர்ச்சி பெற்றது. 


இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளிகளில் குடிநீர் வசதி, மாணவ, மாணவியருக்கு தனித்தனி கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், நுாலகம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். அய்யங்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் போதிய வகுப்பறை வசதியின்றி, மரத்தடி மற்றும் தகர கொட்டகையின் கீழ் மண் தரையில் அமர்ந்து மாணவர்கள் படிக்கின்றனர். 


இது குறித்து ஜூன் 9ல் ’தினமலர்’ நாளிதழில் ’வகுப்பறையின்றி அரசு பள்ளி மாணவர்கள், மழைக்காலங்களில் கட்டாய விடுமுறை,’ தலைப்பில் செய்தி வெளியானது.


இப்பள்ளிக்கு போதிய வகுப்பறைகள், நுாலகம், சுற்றுச்சுவர், கழிப்பறைகள், குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், 

மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கார்த்தி மனு செய்திருந்தார்.


நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், மதுரை கலெக்டர், முதன்மைக் கல்வி அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை நவ.,15க்கு ஒத்திவைத்தது. 


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்