உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

’தினமலர்’ நீட் மாதிரி தேர்வு; 7,870 மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: தினமலர் நாளிதழ் மற்றும் பிம்ஸ் கோச்சிங் சென்டர் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வில், 7,870 மாணவர்கள் பங்கேற்றனர்.


பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்து, தினமலர் நாளிதழ் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் கோச்சிங் சென்டர் இணைந்து, நீட் மாதிரி தேர்வை நேற்று நடத்தின.


புதுச்சேரி செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி உள்பட கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில் 9 மையங்களில் மாதிரி தேர்வு நடந்தது.


காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடந்த தேர்வில், 9 மையங்களில், 7,870 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வில், இயற்பியல் பாடத்தில் 45 வினாக்கள், வேதியியல் 45 மற்றும் உயிரியலில் 90 வினாக்கள் என மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்பட்டது.


ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் வீதம், 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. தேர்வு முடிந்தவுடன், வினாக்களுக்கான, விடை குறிப்பு (கீ-ஆன்சர்) மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்