உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை

தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பள்ளி களிலும், 37 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவி பள்ளிகளிலும் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 


ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர், ஆசிரியர்கள் விகிதத்தில், அதிக முரண்பாடுகள் உள்ளன. மாணவர்களை விட ஆசிரியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது.


இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை மட்டும் நியமித்து, தில்லுமுல்லு நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


இதை கட்டுப்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,500 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குனரக அனுமதியின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய நியமனங்கள் செய்வதோ, இடமாறுதல் வழங்குவதோ கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.


பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளி நேரம் போக, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 


சிறப்பு வகுப்புகளின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சுண்டல், பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகின்றன. சில பள்ளிகளில் காலையில் சிற்றுண்டி, மாலையில் தேனீர் வழங்கப்படுகிறது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்களே மாலை நேர சிற்றுண்டி எடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், கிராமங்களை உள்ளடக்கிய நகர பள்ளிகளில், மாலை நேர சிறப்பு வகுப்பு, இரவு, 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. அதே போல், அதிகாலையில், 6:00 மணிக்கு சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன.


இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படுகிறது. மாணவியர், அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வருவதும், மாலை இருள் சூழ்ந்த பின், பள்ளியிலிருந்து பஸ்களில் வீட்டுக்கு வருவதும், பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.


எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளை காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் முடித்துக் கொள்ள, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். சில மாவட்டங்களில் மட்டும் இந்த உத்தரவு உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இதை அமல்படுத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்