உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

தலைமை இன்றி தடுமாறும் அரசு உயர்நிலைப்பள்ளிகள்

கோவையில், 17 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாததால், கற்பித்தல் பணிகளோடு, நிர்வாக பணிகளும் சுணக்கத்துடன் நடப்பதாக, புகார் எழுந்துள்ளது.


பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, மே 19ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடந்தது. இதில், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு, மே 24ம் தேதி நடக்கவிருந்த, பதவி உயர்வு கவுன்சிலிங், உயர்நீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் இருந்ததால், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.


இதனால், மாநிலம் முழுவதும், 900 பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும், 17 அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர்பணியிடம் காலியாக உள்ளது. இதனால், நிர்வாக பணிகளோடு, கற்பித்தல் பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் நீடிக்கிறது.


குறிப்பாக, ஒரு தலைமை ஆசிரியர் வாரத்தில், 10 வகுப்புகள் கையாள வேண்டும். இவ்வகுப்புகளோடு, நிர்வாக பணிகளையும் சேர்த்து, உதவி தலைமை ஆசிரியர் மேற்கொள்வதால், அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுதல், மதிப்பீட்டு பணிகளுக்கு ஆசிரியர்களை நியமித்தல் உள்ளிட்ட, செயல்பாடுகளை மேற்கொள்வதில், சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.


அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ’நடப்பு கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தலைமை ஆசிரியர் இன்றி, பள்ளி செயல்பாடுகளை கவனிப்பது, சிரமமாக உள்ளது. எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து, விரைவில் வழக்குகள் முடிக்க, கல்வித் துறை முன்வர வேண்டும்’ என்றனர்.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்