உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

சுருக்கெழுத்து பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பெற, மாணவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


இது தொடர்பாக, கலெக்டர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

 

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கான பயிற்சி கட்டணத்தை, தமிழக அரசு வழங்குகிறது.


2017-18ம் ஆண்டில், மாவட்டத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியர், தாங்கள் பயிற்சி பெறும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாகவோ, அல்லது நேரடியாக, கலெக்டர் அலுவலகத்தில், முதல் தளம், அறை எண், 113ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்