உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

குரூப்-4 இலவச பயிற்சி;நாளை திறனறி தேர்வு

திருப்பூர்: பார்க் கல்லூரி மற்றும் ரேடியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், போட்டித்தேர்வு பயிற்சியில் சேருவதற்கான, திறனறி தேர்வு நாளை நடக்க உள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 9,351 பணியிடங்களுக்கான, குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வு, வரும், 2018 பிப்., 11ல் நடைபெறவுள்ளது. தேர்வெழுத விரும்புவோர், டிச., 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர் களுக்கு, இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.


திருப்பூர் பார்க் கல்லூரி, ரேடியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், பார்க் கல்லூரி வளாகத்தில், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. 


எஸ்.சி.,- எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவை

களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.இதர வகுப்பினருக்கு, நாளை திறனறி தேர்வு நடத்தி, அதில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோருக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, கல்லூரி முதல்வர் முருகவேல் தெரிவித்துள்ளார்.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்