உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

போலி கல்வி நிறுவனங்கள்: ரயில்வே எச்சரிக்கை

ரயில்வேயில், &'டி&' பிரிவில், டிராக்மேன், ஸ்விட் மேன், போர்ட்டர், ஹெல்பர் உட்பட, 62 ஆயிரத்து, 907 பேர், &'சி&' பிரிவில், அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீஷியன்கள் என, 26 ஆயிரத்து, 502 பேர், நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.


இந்நிலையில், தேர்வுக்கு இளைஞர்கள் ஆர்வமுடன் தயாராகி வருவதை சாதகமாக்கி, ரயில்வே பாதுகாப்பு பட்டயப்படிப்பு வழங்கி, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக, தனியார் போலி கல்வி நிறுவனங்கள் சில, ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. 


சேலம் கோட்ட, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியன் ரயில்வேயின் கீழ், எந்த கல்லுாரியும் செயல்படவில்லை; தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம், பாதுகாப்பு பட்டயப்படிப்பு வழங்குவதும் இல்லை. ஆர்.ஆர்.பி., எனப்படும், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் ஆர்.ஆர்.சி., எனப்படும், ரயில்வே தேர்வுப் பிரிவு ஆகியவற்றின் மூலம் மட்டுமே, ரயில்வேக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, போலி நிறுவனங்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு, அதிகாரி கூறினார்.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்