உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

இளைஞர் பரிமாற்ற மாநாடு பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் நேபாளம் மற்றும் கம்போடியாவில் நடந்த சர்வதேச இளைஞர் பரிமாற்ற மாநாடு, மத்தியபிரதேச மாநிலம் நொய்டா பல்கலைக் கழகத்தில் நடந்த தேசிய இளைஞர் திருவிழா நிகழ்ச்சியிலும், கர்நாடகா மாநிலம் குல்பர்கா கல்லுாரியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாம்களில் பங்கேற்றனர்.

 

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மணியன் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். பதிவாளர் ஆறுமுகம், பேராசிரியர்கள் செல்வராஜன், மணிவண்ணன், திட்ட அலுவலர்கள் சவுந்திரபாண்டியன், அய்யப்பராஜா, செந்தில்முருகன், ராஜேஸ்வரி, தமிழ்மாறன் உடனிருந்தனர்.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்