உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11


முதல் பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி

இஸ்ரோ தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

புதுச்சேரி: இஸ்ரோ நடத்தும் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.


பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி அறிவியல் கண்காட்சியை, அமைச்சர் கமலக்கண்ணன் துவக்கி வைத்து பேசியதாவது: புதுச்சேரி கல்வியில் சிறந்த இடத்தில் உள்ளது. மாணவர்கள் சிறந்த கல்வியை பெற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட இஸ்ரோ ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 


ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, ஒன்று அல்லது இரண்டு மாதம் இஸ்ரோவில் பயிற்சி அளிக்க உள்ளது. புதுச்சேரியில் இருந்து 3 மாணவர்கள் இஸ்ரோவிற்கு அனுப்பப்பட உள்ளனர். அதற்கான தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் வெற்றிக்கு வழிகாட்டி