உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11


முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

டெங்கு விழிப்புணர்வு பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை: டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் மாணவர்களுக்கு, &'டெங்கு&' மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காலை நேர பிரார்த்தனை கூட்டங்களில், காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து, மாணவர்களுக்கு, அறிவுரை வழங்க வேண்டும்.


உண்பதற்கு முன்பும், பின்பும், கைகளை சுத்தமாக கழுவுதல், வகுப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், கழிவறைகளுக்கு சென்று வரும்போது, சோப் போட்டு கைகளை கழுவுதல், சுத்தமான காய்ச்சிய குடிநீரை பருகுதல் போன்ற பழக்கங்களை, மாணவர்கள் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.பள்ளி வளாகங்களிலும், வீடுகளிலும் நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். டெங்கு கொசு, நல்ல நீரில் உருவாவதுடன், பகல் நேரங்களில் கடிக்கும் என்ற விழிப்புணர்வை, மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். 


அவர்கள் வழியே, பெற்றோருக்கும், இந்த செய்தியை எடுத்து செல்ல வேண்டும்.என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம், என்.சி.சி., மற்றும் பசுமை படை போன்றவற்றில் உள்ளவர்களை, சுகாதார துாதர்களாக நியமித்து, மாணவர்களிடம் சுகாதாரத்தை பேண வலியுறுத்த வேண்டும். சாதாரண காய்ச்சல் என்றாலும், மருத்துவமனைகளுக்கு சென்று, விரைவாக பரிசோதனை செய்ய, அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்